மஹியங்கனையில் அதிகாலை நடந்த கோரவிபத்து: பத்துப் பேருக்கு ஏற்பட்ட சோகம்!! (Photo)

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட பத்துப் பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை(17)அதிகாலை-01.30 மணியளவில் சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலையிலிருந்து தியத்தலாவ நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் மஹியங்கனையிலிருந்து பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் மேற்படி விபத்து நிகழ்ந்துள்ளது.

மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பத்துப் பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்கள் அனைவரும் மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்களும் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்த விபத்துச் சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேலும் இரண்டு பெண்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை,குறித்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.