யாழில் வீடு திரும்பிய குடும்பத் தலைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

437

வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் வெளியே சென்ற சமயம் பார்த்து வீடுடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடிப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை(20) முற்பகல்-10 மணிக்கும் நண்பகல்-12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடிப் பகுதிக்கு அண்மையாகவுள்ள வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் வெளியே சென்ற சமயம் பார்த்து மேற்படி வீட்டை உடைத்த கொள்ளையர்கள் வீடு முழுவதும் சல்லடையிட்டுத் தேடியுள்ளனர்.

இதன்போது வீட்டு அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஐந்து பவுண் தங்கநகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிற்கு வெளியே சென்றிருந்த குடும்பத்தலைவர் நண்பகல் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்வையிட்ட போது வீடு உடைக்கப்பட்டுக் கொள்ளை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

இதேவேளை, மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குடும்பத்தலைவர் மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்துப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{தமிழின் தோழன்-}