சிவத்தமிழ் வித்தகருக்கு இன்று கொழும்பில் நினைவேந்தல்

537

யாழ்.குப்பிழான் மண் தந்த அமரர்-சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை(20)பிற்பகல்-04.30 மணி முதல் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நினைவேந்தல் நிகழ்வில் “சிவத்தமிழ் வித்தகரின் பன்முகப் பணிகள்” எனும் தலைப்பில் சுங்கத் திணைக்கள அத்தியட்சகர் செ.சக்திதரன் உரையாற்றவுள்ளார்.

“சமயமும் சமூகமும்” எனும் தலைப்பில் சமூக ஆய்வாளர் தெ. மதுசூதனனும், “தேசிய உருவாக்கத்தில் பண்பாட்டின் பங்கு” எனும் தலைப்பில் சமூக ஆய்வாளரும்,ஆசிரியருமான பொன் பிரபாகரனும் உரை நிகழ்த்தவுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் மாணவர்கள், நண்பர்கள், சமய-சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(எஸ்.ரவி-)