இலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தென்னிந்திய பிரபலம்!!

இலங்கை கொழும்பிலுள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடாத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பிலிருந்து தென்னிந்தியாவின் பிரபல திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக நடிகை ராதிகா டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அடக் கடவுளே இலங்கையில் குண்டு வெடிப்பு… “நான் கொழும்பின் சின்னமோகன் கிராண்ட் ஹோட்டலில் தான் தங்கியிருந்தேன். சிறிது நேரத்திற்கு முன்னர் தான் அங்கிருந்து கிளம்பினேன். என்னால் நம்பவே முடியவில்லை அதிர்ச்சியில் இருக்கின்றேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவிலுள்ள மற்றொரு தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. அதே போன்று நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 6 பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.