எந்தநேரத்திலும் தயார் நிலையில் யாழ். பொலிஸார்!!

302

சந்தேகத்துக்கிடமான வகையில் பொதிகள்,பெட்டிகளைக் கண்டவுடன் பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். எந்தநேரத்திலும் துரிதமாகச் செயற்படுவதற்குப் பொலிஸார் தயார் நிலையிலுள்ளதாக யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறிமுகமற்றவர்கள் எவராவது உங்கள் பிரதேசங்களில் நடமாடினால் அவரை யாரென முதலில் விசாரியுங்கள். இதன்போது அவர் மாறுபட்ட தகவல்களை வழங்கினால் பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கமான 119 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தகவலை வழங்குங்கள்.

கொழும்பு,நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்களை நடாத்தியவர்கள் கைப்பையுடனேயே வருகை தந்துள்ளனர் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, யாழ்.பொதுமக்களும் அவதானமாகவிருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

{தமிழின் தோழன்-}