யாழிலும் இரு சந்தேகநபர்கள் கைது!!

312

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான இரு சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் நடாத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம்(21) தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகிய நிலையில் நேற்றுப் பிற்பகல்-03 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் இரவு வேளையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பயணப் பொதியுடன் ஒருவர் நடமாடியுள்ளார்.

அவரது செயற்பாடுகளால் சந்தேகமடைந்த சிலர் இதுதொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கினார்கள்.

மேற்படி தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரிடம் விசாரணைகள் மேற்கொண்டனர்.அப்போது அவர் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்கியுள்ளார். இதனால்,சந்தேகமடைந்த பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து விசாரணைகளின் பின்னர் விடுவித்துள்ளனர்.

வேலைதேடி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த மற்றொரு முஸ்லீம் நபரொருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் விடுத்துள்ளனர்

{தமிழின் தோழன்-}