யாழில் கிராம ஊர்வலம் இடைநிறுத்தம்

377

யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை(22)கிராம ஊர்வலம் இடம்பெறவிருந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளதாக ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்றைய தினம்(21)ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையடுத்தே மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்.குடாநாட்டில் ஏற்கனவே நடாத்துவதற்கெனத் திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளும் தற்போதைய நாட்டு நிலைமைகள் காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(எஸ்.ரவி -)