மைத்திரி, ரணில், மகிந்தவுக்கு புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!!

234

எதிர்வரும் வாரங்களில் நாட்டின் தலைவர்களை ஒன்றாகப் பயணிக்க வேண்டாமென அரச புலனாய்வுச் சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்ரமசிங்க,எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதல்களை நடாத்தும் சாத்தியங்கள் காணப்படுவதாக கிடைத்துள்ள தகவல்களையடுத்தே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிகழ்வுகளிலிருந்து குறிப்பாகத் தேவாலயங்கள், ஆலயங்கள், ஏனைய மத வழிபாட்டிடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளிலிருந்து தலைவர்களை விலகியிருக்குமாறும், அவர்களின் பங்கேற்பு முக்கியமெனில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.