ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் சீன விஞ்ஞானிகள் நால்வரும் பலி!

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் சீன விஞ்ஞானிகள் நால்வரும் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் ஆய்வு நோக்கங்களுக்காக கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.இதன்போதே இவர்கள் குண்டுவெடிப்பில் பலியாகியுள்ளனர். இவர்களின் சடலங்கள் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தக் குண்டுவெடிப்பில் சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என சீனாவின் ஷின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.