திருமணம் வேண்டாம்: பிரபல நடிகர் எடுத்துள்ள முடிவு!!

53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலிருந்து வரும் பிரபல நடிகர் சல்மான் கான் வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிவூட் சினிமாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது ஒன்றும் புதிதல்ல.ஷாருக்கான்-கௌரி கான் தம்பதி, அமீர் கான்-கிரண் ராவ் தம்பதி, இயக்குனர் கரண் ஜோஹர், நடிகை சன்னி லியோன் போன்ற வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த வரிசையில் பொலிவூட் சினிமாவின் கிங் கான் என அழைக்கப்படும் சல்மான் கான் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்காக உரிய வாடகைத் தாய்மார்களை அவர் தேடி வருவதாக பொலிவூட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தி சினிமாவின் வசூல் மன்னனாக சல்மான் கான் உள்ளார். இவர் திரைப்படங்களைத் தாண்டி சர்ச்சைகள், மூலம் இந்தியளவில் பிரபலமானவர்.பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் இதுவரை இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தான் திருமணம் செய்து கொள்ளாமலிருப்பதற்கான காரணத்தை இதுவரை சல்மான் கான் தெரிவிக்கவில்லை. எனினும், அவ்வப்போது அவர் தொடர்பான திருமண செய்திகள், காதலிக்கும் நபர் போன்ற தகவல்கள் வெளிவருவது வாடிக்கை தான்.

ஆனால், இதில் முற்றிலும் மாற்றாக சல்மான் கான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருடைய சகோதர்களின் குழந்தைகள் மற்றும் தங்கையில் குழந்தையோடு நெருக்கம் காட்டினாலும் சல்மானுக்குத் தற்போது குழந்தை பெறும் ஆசை வந்துள்ளது.

இதனால், தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அவர் திருமணம் செய்து கொள்வது குறித்து எந்த முடிவுமெடுக்காமல் குடும்பத்தினரை வருத்தமடையச் செய்துள்ளதாம்.