வவுனியாவில் பாகிஸ்தான் அகதிகள்: சற்றுமுன் களத்தில் பெளத்த பிக்குமார்! (Photo)

243

பாகிஸ்தான் அகதிகளை வவுனியாவில் குடியேற்றியமைக்கு எதிராக பெளத்த குருமார்கள் களத்தில் குதித்துள்ளனர்.

அகதிகளை குடியேற்றியமைக்கு எதிராக மேலதிக அரச அதிபரிடமும், வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமும் மனுக் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர் தங்கவைக்கப்பட்டுள்ள பூந்தோட்டம் பலநோக்கு கூட்டுறவு சங்க பயிற்சி கல்லூரிக்கு (புனர்வாழ்வு நிலையம்) விஜயம் மேற்கொண்டிருந்த பெளத்த பிக்குமார்கள் இரகசியமாக அழைத்து வந்தவர்களின் விபரத்தைத் தருமாறும், அகதிகளைப் பார்வையிட விடுமாறும் தற்போது பொலிஸாரைக் கோரி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த அகதிகளை இங்கிருந்து அகற்றாதைவிடத்து வீதியில் இறங்கிப் போராட்டம் செய்ய வேண்டிவரும் என வவுனியா சென்ற பிக்குமார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.