ஜனாதிபதியின் முகநூல் கணக்கை முடக்கி வெளியான காணொளி!!

272

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கு முடக்கப்பட்டு நேரலையான காணொளியொன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கில் திடீரென நேரலைக் காணொளியொன்று பதிவேற்றப்பட்டது. ஐந்து நிமிடங்களுக்கு வாகனப் போக்குவரத்து தொடர்பான காட்சி ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் முகநூல் கணக்கினுள் நுழைந்து யாரேனும் இந்தப் பதிவை இட்டனரா? அல்லது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் தவறுதலாக இந்தப் பதிவேற்றம் நிகழ்ந்ததா? என சம்பந்தப்பட்ட தரப்பினரே விசாரிக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.