வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம்: பிரதமரால் ஆரம்பித்து வைப்பு! (Photo)

288

வடக்கு-கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக பனை நிதியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுத் திங்கட்கிழமை(27) அலரி மாளிகையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

2019 ஆம் ஆண்டில் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக 50 பில்லியன் ரூபாவை மூலதனச் செலவினமாக அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது.

போரினால் அழிவுகளைச் சந்தித்த பகுதிகளின் அபிவிருத்திக்காகப் பனை நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பல்வேறு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதியத்தைப் பயன்படுத்த முடியும்.

இந்த நிதியம் தவிர்ந்த கம்பெரலிய திட்டத்தின் கீழ் ஏழு பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.அத்துடன் இரண்டு மாகாணங்களிலும் 2000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

20 ஆயிரம் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். வடக்கு கிழக்கைச் சேர்ந்த பட்டதாரிகளும் இந்த ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்படுவரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டார்.