கற்பூரத் திருவிழா காணும் நல்லைக் கந்தனுக்கு விண்ணப்பம்

ஒயிலாய் குறத்தி ஒருபக்கம் வேழ மயிலாள் மறுபக்கம்
ஆறுமுகங்களுடைய அழகு திருக்குமரனாய்
மயக்கும் மாலை வேளையில் மணவாளக் கோலத்தில்
துள்ளி வரும் வேலுடன் புள்ளி மயில் வாகனத்தில்
அசைந்தாடி வரும் உன் அழகைக் காண
கண்களிரண்டும் போதாது கார்த்திகேயனே!
காணக் கண் கோடி வேண்டும் கந்தவேள் பெருமானே!
வள்ளி மணவாளனே!! உள்ளம் கவர் கள்வனே!!
தள்ளி நின்றது போதுமையா!
கற்பூரத் திருவிழா காணும் இந்நாளில்
கலிகாலக் கொடுமைகள் யாவும் நீங்கிட
உன் பொற்பாதமே கதியெனப் பணிந்தேற்றுகின்றோம்
கரையேறாக் கன்னியர் வாழ்வு கரையேறத் துணையாவாய்!
காலமெல்லாம் உன்புகழ் பாடிட வரமருள்வாய்!

{கவியாக்கம்:- ‘குறிஞ்சிக்கவி’ }