யாழ்ப்பாண கரட்டுக்கு சிங்கள பிரதேசங்களில் தனி மவுசு (Video)

319

யாழ்ப்பாணம் வலிகாமத்தின் பல பிரதேசங்களில் கரட் அறுவடை இடம்பெற்று வருகின்றது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அதாவது சித்திரை 21 தாக்குதலுக்கு பின்பான நாள்களில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் பெரும் வீழ்ச்சி கண்டன.

கரட் விலையும் 20 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை இருந்தது. விவசாயிகள் பலருக்கும் தோட்டத்தில் கரட்டுக்கு போட்ட முதலீடு கூட வரவில்லை. கரட் அறுவடை செய்யும் போது விற்பனை செய்வதில் பாதி பணம் அறுவடை செய்யும் கூலிக்கே செலவாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்திருந்தனர்.

பின்னர் தற்போது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கரட் விலை கிலோவுக்கு 50 – 75 வரை விற்பனையாகின்றது.

யாழ்ப்பாணத்து கரட்டுக்கு சிங்கள பிரதேசங்களில் நல்ல மவுசு காணப்படுகின்றது. இதனால் தம்புள்ளையில் சிங்கள வியாபாரிகள் யாழ்ப்பாண கரட்டை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றார்கள்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தைகளில் 150 – 200 ரூபாய் வரை கரட் சந்தையில் விற்கப்படுகின்றது. ஆனால் சந்தைகளில் விவசாயிகளிடம் 65 ரூபாவுக்கு தான் வியாபாரிகள் கொள்வனவு செய்கின்றார்கள்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் நுவரெலியா கரட்டுக்கு தான் மவுசு அதிகம்.

இனி வரும் வாரங்களில் யாழில் கரட் விலை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.