‘YouTube’ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

279

சமூகவலைத் தளங்களில் இனவெறி மிகுந்த காணொளிகள் அதிகம் வலம் வரும் நிலையில் இனவெறியைத் தூண்டும் விதமான காணொளிகளைத் தடை செய்வதாக ‘YouTube’ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

YouTube நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது. தற்போது மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கும், ஒரு இனம் உயர்ந்தது என்பது போல் சித்தரிக்கும் காணொளிகளை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வந்திருக்கும் இந்த நடவடிக்கையை முழுமையாக செய்து முடிக்க சில மாதங்கள் ஆகலாம். இருப்பினும், படிப்படியாக முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.