ஒரு பழத்துக்கு இத்தனை இலட்சங்களா!!: எங்கு தெரியுமா? (Photo)

முன்னெப்போதுமிலலாத வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில் பழங்களின் அரசன் என்றழைக்கப்படும் துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

துரியன் பழங்கள் பிறருக்கு நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு அதிக துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் பழமாக காணப்படுகிறது.

உலகின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஆசிய நாடுகளில் போட்டி மிக்க சந்தையை கொண்டுள்ள துரியன் பழங்கள் பொதுப் போக்குவரத்து, உணவகங்கள் மற்றும் சில நாடுகளில் விமானங்களில் எடுத்து செல்வதற்கும் தடை செய்யப்பட்டதொன்றாகும்.

இந்நிலையில் சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற ‘கிங் ஆஃப் துரியன் பெஸ்டிவல்’ எனும் நிகழ்வின் ஒரு பகுதியாக நடாத்தப்பட்ட ஏலத்தில் மரத்திலிருந்து பறிக்கப்பட்டு ஒரே நாளேயான துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார்- 33 இலட்சம் ரூபாய்க்கு விலை போயுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.