நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை(16) காலை நாடு திரும்பியுள்ளார்.

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தஜிகிஸ்தானுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.

அத்துடன் அந்நாட்டு ஜனாதிபதியையும் சந்தித்த மைத்திரிபால சிறிசேன இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாமிர் புட்டினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.