மின்சார வாடிக்கையாளர்களுக்கு இனிப்பான செய்தி: புதிய செயலி இன்று அறிமுகம்!

மின்சார வாடிக்கையாளர் சேவையை மேலும் செயற்றிறன் மிக்கதாக மாற்றும் நோக்குடன் புதிய மொபைல் எப் (App) ஒன்றை இன்று திங்கட்கிழமை(17) மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிமுகப்படுத்துகிறது.

CEB Care எனும் பெயரில் இந்த மொபைல் அப் கெயார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு முறைப்பாடுகளை முன்வைத்தல்,மின்கட்டணம் தொடர்பான சேவைகளை இந்த அப்பினூடாக வழங்கவுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளில் CEB Care அப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.