யாழ். குப்பிழான் கன்னிமார் கெளரியம்பாளுக்கு நாளை 1008 சங்காபிஷேகம்

251

யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக தினத்தையொட்டி 1008 சங்காபிஷேக உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(23) சிறப்பாக இடம்பெறவுள்ளது.

நாளை காலை-08 மணிக்கு கும்ப பூசை,அம்பாளுக்கு விசேட அபிஷேக பூசையுடன் ஆரம்பமாகும் நிகழ்வில் அம்பாளுக்கும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் 1008 சங்காபிஷேக உற்சவம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூசையும், அம்பாள் அலங்கார நாயகியாக வீதியுலா வரும் கண்கொள்ளாக் காட்சியும் இடம்பெறும். தொடர்ந்து மகேஸ்வர பூசை என அழைக்கப்படும் அன்னதானமும் இடம்பெறும்.

மேற்படி நிகழ்வில் அம்பிகையின் அனைத்து அடியவர்களும் ஆசார சீலர்களாக கலந்து கொண்டு திருவருள் பெறுமாறு ஆலயபரிபாலன சபை கேட்டுள்ளது.

{தொகுப்பு:- செ. ரவிசாந்-}