சாமி கும்பிட சென்ற முதலை: ஆச்சரியத்தில் பக்தர்கள்!! (Videos)

இந்தியாவின் குஜராத்திலுள்ள கோயிலில் முதலையொன்று கோயில் கருவறை வரை சென்று சுவாமி கும்பிட்ட சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பால்லா கிராமத்திலுள்ளது கோடியர் கோயில். ”கோடியர் தேவி” எனப்படும் இந்து மதப் பெண் கடவுளின் கோயில் அது.

முதலையை வாகனமாகக் கொண்ட கோடியர் தேவிக்கு வட இந்தியாவில் பல்வேறிடங்களிலும் கோயில்களுள்ளன.

இந்நிலையில் நேற்று வழக்கம் போன்று கோயிலில் தரிசனம் செய்வதற்குப் பக்தர்கள் சென்ற போது ஆறு அடி நீளமுள்ள முதலையொன்று கருவறையில் படுத்துக் கிடந்தது.

வந்தவர்களைப் பயமுறுத்தாமல், தாக்காமல் அமைதியாக கோடியர் தேவி சிலையை பார்த்தவாறு அது படுத்திருந்தது. இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போன பக்தர்கள் ஓடிப்போய் ஊருக்குள் இதை சொல்லியிருக்கிறார்கள். ஊர் மக்கள் கூடி வந்தும் முதலை பயப்படாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறது.

கோடியர் தேவியை தரிசிக்க வந்த முதலையை மக்கள் மலர் தூவி வழிபட்டுள்ளனர். முதலையும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக இருந்துள்ளது.

கோயிலுக்குள் முதலை இருக்கும் தகவல் மஹிசாகர் வனத்துறைக்கு தெரிந்ததும் அவர்கள் முதலையை பிடிக்க கோடியர் தேவி கோயிலுக்கு வந்துள்ளனர். ஆனால்,அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அவர்கள் உள்ளே சென்று முதலையைப் பிடிக்கக்கூடாதெனத் தடுத்து நிறுத்தினர்.

அவர்களுடைய தடையை மீறி உள்ளே புகுந்த வனத்துறையினர் முதலையைப் பிடிக்க முயன்றனர். கோபமான முதலை அவர்களை தன் வாலால் தாக்கியுள்ளது. பிறகு எப்படியோ சமாளித்து முதலையைப் பிடித்து விட்டனர்.

அதை கோவிலிலேயே விட சொல்லி பொது மக்கள் கேட்ட போதும் அதற்கு வனத்துறை மறுப்புத் தெரிவித்துவிட்டது. பின்னர் ஒரு காட்டிலுள்ள ஒரு குட்டையில் கொண்டு சென்று அந்த முதலையை விட்டுவிட்டார்கள்.

கோடியர் தேவியை வழிபட முதலை வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.