இலங்கை கறுவாவுக்கு உலக சந்தையில் கிடைத்த மவுசு!!

413

உலக சந்தையில் இலங்கை கறுவாவுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இலங்கை கறுவாவுக்கு காணப்படும் போட்டியை வெற்றிகொள்ளும் வகையில் கறுவா கைத்தொழிலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் புவியியல் சார் குறியீட்டை வழங்குவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை கறுவா 80 வீதமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க சந்தைகளுக்கும், மடகஸ்கார் மற்றும் சீஷெல்ஸ் போன்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கறுவாவினால் இலங்கை கறுவா கடும் போட்டியை எதிர்நோக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.