இணையத்தில் வைரலாகிய யானை!- ஏன் தெரியுமா?

இன்று உலகில் அதிகம் அழிக்கப்பட்டு வரும் உயிரினங்களில் ஒன்றாக தந்தமுள்ள யானை இருக்கிறது.

ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் உள்ள நாடான போட்ஸ்வானாவில் யானை ஒன்றைக் கொடூரமாகக் கொன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன.

அந்த வகையில் போட்ஸ்வானாவில் யானை ஒன்று தந்தத்திற்காக கொடூரமாக தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட காட்சியை புகைப்படக் கலைஞர் ஜஸ்டின் சலைவன் என்பவர் தனது ட்ரோன் கமரா மூலம் பதிவு செய்துள்ளார்.

இதில் வறண்ட அந்தக் காட்டின் நடுவே யானை ஒன்று தலை வெட்டப்பட்டுப் கிடக்கும் காட்சியை புகைப்படமாக பதிவு செய்துள்ளார்.

இதில் ஜஸ்டின் எடுத்த புகைப்படங்கள் விலங்கு நல ஆர்வலர்களிடம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


போட்ஸ்வானாவில் சமீபத்தில்தான் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடைக்கு முன்னரும் போட்ஸ்வானாவில் கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேலான யானைகள் கொல்லப்பட்டு வந்துள்ளன.

தற்போது ஜஸ்டின் எடுத்த இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிரான எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்து வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.