குடிபோதையில் பாம்பை கடித்து துண்டாக்கியவர் கவலைக்கிடம் (Photos)

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள குடிபோதையில் இருந்த ஒருவர் தன்னை கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்குமார் என்ற நபர் தன் வீட்டில் அமர்ந்து மது அருந்திய நிலையில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு அவரை கடித்து விட, குடி போதையில் கோபத்துடன் பாம்பை பிடித்து துண்டு துண்டாக கடித்துள்ளார்.

உடனடியாக வீட்டில் இருந்த ராஜ்குமாரின் தந்தை மகனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ராஜ்குமாரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவத்திற்கு ஆகும் செலவும் மிகவும் அதிகம் என்பதால் ராஜ்குமாரின் தந்தை பாபு ராம் கவலையில் உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவர் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும், மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ராஜ்குமாரின் குடும்பத்தார் பாம்பை எரித்துள்ளனர்.