ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி! (Photo)

இந்தியாவின் கேரளாவில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார்ச் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு லட்டு வழங்கி பொலிஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் ஹெல்மேட் போடாத மோட்டார் வாகன ஓட்டிகளைத் தடுத்தி நிறுத்திய பொலிஸார் அவர்களுக்கு லட்டுகளை கொடுத்து வருகின்றனர். இதனை வாகன ஓட்டிகளும் திகைப்புடன் வாங்கியுள்ளனர்.

இதேவேளை, இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வந்தால் 500 ரூபா அபராதம் விதிக்கப்படுமெனப் பொலிஸார் இதன்போது அன்புடன் எச்சரிக்கை விடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.