நாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை – கவிதை

பனை அபிவிருத்திச் சபை ஆரம்பித்து இன்றுடன் (07) நாற்பத்தியொரு வருடங்கள் ஆகின்றன. இதனை வாழ்த்தி வழங்கும் கவிதை,

நாற்பத்தொன்றில் பனை அபிவிருத்திச் சபை

அன்புடன் அறிபவர்க்கு ஏடு தந்தாய்
ஆற்றாத பசி போக்க
அறுசுவை உணவு தந்தாய்.

இல் வாழ்வதற்கு குடிசை தந்தாய்
ஈகையில் நீ உயர்ந்து நின்றாய்.
உயர்ந்து வளர்ந்து நின்று
ஊர் மக்களைக் காத்து நின்றாய்.

எம்மவர் மனந்தனில் நீ நிறைந்தாய்
ஏற்றமுடன் வாழ ஏழைகளுக்கு வழி
சமைத்தாய்!

ஐயமின்றி உன் நிலையை உணர்த்தி நின்றாய்
ஒருவரின்றி எல்லோரும் ஒன்றுபட்டு
ஓர் சபை அமைத்திட்டனர்.

உன் பெருமையை எல்லோரும் அறிந்திட
அபிவிருத்திப் பிரிவினைச்
செயற்படுத்தினர்
ஆய்வுகள் செய்தனர்.

உன் உற்பத்திகளை
இல்லை!
எந்த விக்கினமும் உன் உற்பத்தியில் என்பதோடு
அவை ஒளடதம் போன்றது
எம் எல்லோருக்கும்
என்றனர் ஆராய்ச்சி நிறுவனத்தினர்.

உனக்கான சபை அமைத்து
ஆண்டு நாற்பத்தொன்று ஆகிறது
ஊக்கமாக இன்னும் செயற்பட்டால்
உரிய நன்மைகளை நம்பி வாழும்
மக்கள் பெற்றிட செய்திடலாம்.

பனை எங்கள் வளம் என
பத்திரத்தில் பத்திரப்படுத்தாமல்
பாங்குடன் பய பக்தியுடன்
பக்குவமாக பேணி வளர்ப்போம்
இக்கற்பக தருவை
பயன்பல பெற்றுப் பாரினில்
பல்லாண்டு வாழ்ந்திடுவோம்!.

தி.பன்னீர்செல்வம் –
(பனை அபிவிருத்திச் சபையின்
ஓய்வு பெற்ற அதிகாரி)