யாழில் இயற்கை விவசாய நிலையம் உதயம் (Photos)

798

யாழ்ப்பாணத்தின் இயற்கை விவசாய முயற்சி முன்னோடி இளைஞன் அல்லை விவசாயி மகேஸ்வரநாதன் கிரிசனின் தனி உழைப்பால் இயற்கை விவசாய விற்பனை நிலையம் இன்று திங்கட்கிழமை(12)பிற்பகல் இலக்கம் – 384 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் நாடா வெட்டி மேற்படி விற்பனை நிலையத்தை சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இரசாயனமற்ற மரக்கறிகள், கீரை வகைகள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் ஒருங்கிணைந்த விற்பனை நிலையமாக மேற்படி விற்பனை நிலையம் உருவெடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிக்கூட்டுக் கோபுர வீதியில் பெருமாள் கோவிலுக்கு அருகில் சிறிய நிலையமாக இயங்கிவந்த அல்லைவிவசாயி இயற்கை விவசாய விற்பனை நிலையம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் புதிய முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இயற்கையில் விளைந்த ஆரோக்கியமான உணவுகளைச் சமைத்து வழங்கும் நிலையமாக குறித்த விற்பனை நிலையம் மிக விரைவில் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

{எஸ்.ரவி-}