ஒன்பதாம் நாளில் நல்லைக் கந்தனின் அருட்காட்சி (Photo)

211

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மாலை உற்சவம் நேற்றுப் புதன்கிழமை(14) சிறப்பாக நடைபெற்றது.

வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்த வேற்பெருமான், வள்ளி- தெய்வயானை சமேதராக உள்வீதியிலும் பின்னர் வெளிவீதியிலும் எழுந்தருளினர்.

வெளிவீதியில் நல்லைக்கந்த வேற்பெருமான் ஜராவத வாகனத்திலும், வள்ளி- தெய்வயானை ஆகிய இரு சக்திகளும் யானை வாகனத்திலும் எழுந்தருளி வலம் வந்த காட்சி அருமையிலும் அருமை.

{செ. ரவிசாந்-}