திருமஞ்சத்தில் நல்லூரானின் அழகுத் திருக்காட்சி: பல்லாயிரக்கணக்கான அடியவர் பங்கேற்பு! (Photos)

238

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா இன்று வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது.

வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில் எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல்-05.30 மணியளவில் முத்துக்குமாரசுவாமி வள்ளி- தெய்வயானை சமேதராக வெளிவீதியில் எழுந்தருளினார்.

திருமஞ்சத்தில் எழுந்தருளியதைத் தொடர்ந்து பிற்பகல்-05.45 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடை சூழ, அடியவர்களின் அரோகராக் கோஷத்தின் மத்தியில் மஞ்சரத பவனி ஆரம்பமாகியது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் காரிகையர் இருவருடன் நல்லைக்கந்தன் மெல்ல மெல்ல ஆடி அசைந்து வந்த காட்சி அற்புதமானது.

{செ. ரவிசாந்-}