ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான்: அறிவிப்பு வெளியானது!

198

மக்கள் விடுதலை முன்னணியின்(ஜேவிபி) ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க இன்று(18) அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடத்தில் இடம்பெற்ற ‘தேசிய மக்கள் சக்தி’ மாநாட்டில் இதுதொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த- 1999 ஆம் ஆண்டு நந்தன குணதிலக்க கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன் தேர்தலில் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கும், 2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவுக்கும் ஆதரவளித்த மக்கள் விடுதலை முன்னணி 2015 ஆம் ஆண்டில் தமது கட்சி சார்பில் எந்த வேட்பாளரையும் பிரேரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.