யாழ். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு!

94

வகுப்புப் பகிஷ்கரிப்பைக் கைவிட்டு இன்று (18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைக்கழகத்தின் பல கட்டடங்களின் நிர்மாணப்பணிகள் உரிய காலத்தில் நிறைவு செய்யப்படாமல் தற்காலிக கட்டடங்களில் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கல்வியை உரிய முறையில் தொடர்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாணவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.