மூத்த கூட்டுறவாளர் சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர் நலன்புரிக் கூட்டுறவுச் சங்கம் நடாத்தும் மூத்த கூட்டுறவாளரும், பணியாளர் நலன்புரிச் சங்க ஸ்தாபகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர்- சி. சிவமகாராசாவின் 13 ஆவது ஆண்டு நினைவு தினமும், பணியாளர் ஒன்றுகூடலும், பணியாளர் சங்கங்களின் பொதுக் கூட்டமும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(20) காலை- 09.30 மணி முதல் தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் ந. உமாகரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராகவும், யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி- சி. ரகுராம், வலி. வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் சிறப்பு விருந்தினர்களாகவும், வலி. வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் ச.சஜீவன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் நா. ஜெயவதனன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

{எஸ்.ரவி-}