பெருந்திரளான அடியவர்களுக்கு மத்தியில் அருட்காட்சி வழங்கிய நல்லூரான் (Photos)

175

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் 13 ஆம் நாள் மாலை உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) பிற்பகல் சிறப்புற நடைபெற்றது.

வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான் வள்ளி-தெய்வயானை சமேதரராக உள்வீதியில் எழுந்தருளினார்.

தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான் காமதேனு வாகனத்திலும், வள்ளி – தெய்வயானை ஆகிய சக்திகள் இடப வாகனத்திலும் ஆலய வெளிவீதியில் எழுந்தருளினர்.

இதேவேளை, நேற்றைய தினம் பெருந்திரளான அடியவர்கள் ஆலயத்தில் ஒன்றுகூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

{செ- ரவிசாந்-}