சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமனம் (Photo)

270

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் இன்று(19) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய,இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக அவர் பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த- 1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் பயிலுனர் உத்தியோகத்தராக இணைந்துகொண்ட சவேந்திர சில்வா இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னியின் 58 ஆம் படைப்பிரிவின் தளபதியாகச் செயற்பட்டு வந்தார். இந்தநிலையில் இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக சவேந்திர சில்வா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, சவேந்திர சில்வா உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நாவினாலும், மனித உரிமை அமைப்புக்களாலும் குற்றம்சாட்டப்பட்டதொருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.