சவேந்திரா சில்வாவுக்கு இராணுவத் தளபதி பதவி: கனடா ஆழ்ந்த கவலை!!

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக கனடா குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக கொழும்பிலுள்ள கனேடியத் தூதரகம் கீச்சகப் பதி வொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் காணப்பட்ட போதிலும் இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பில் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.