சிங்க வாகனத்தில் நல்லூரானின் அருட்காட்சி (Photos)

103

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் 16 ஆம் நாள் மாலை உற்சவம் நேற்றுப் புதன்கிழமை(21) பிற்பகல் சிறப்பாக நடைபெற்றது.

வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான், வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில் எழுந்தருளினர்.

அதனைத் தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான் சிங்க வாகனத்திலும், சக்தியர் இருவரும் மகர வாகனங்களிலும் வெளிவீதியில் எழுந்தருளி அருட்காட்சி வழங்கினர்.

{செ.ரவிசாந்-}