தபால்மூல வாக்களிப்பு: வெளியானது அறிவிப்பு!

எதிர்வரும் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்பிரகாரம் அடுத்தவாரம் முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும், பிரதித் தேர்தல்கள் ஆணையாளருக்குமிடையில் நாளைய தினம் (23) கலந்துரையாடலொன்று நடாத்தப்படவுள்ளது.