பூதகண வாகனத்தில் உலா வந்த நல்லைக் கந்தன் (Photos)

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் 17 ஆம் நாள் மாலை உற்சவம் நேற்று வியாழக்கிழமை(22) சிறப்புற நடைபெற்றது.

வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக்கந்த வேற்பெருமான வள்ளி- தெய்வயானை சமேதரராய் உள்வீதியிலும் பின்னர் வெளிவீதியிலும் எழுந்தருளினர்.

வெளிவீதியில் தேவியர் இருவருடன் நல்லைக்கந்த வேற்பெருமான் பூதகண வாகனத்தில் எழுந்தருளிய காட்சி அருமையான காட்சியாக அமைந்திருந்தது.

இதேவேளை, இன்றைய தினம்(23) நல்லைக்கந்தனின் கார்த்திகை உற்சவமாகும்.

{செ.ரவிசாந்}