விபத்தில் சிக்கிய பஸ்-வான்: 27 பேர் காயம்!

திகம்பதக பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(23) காலை இடம்பெற்ற பஸ்-வான் விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் மேற்படி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.