‘சைவநெறிச் சன்மார்க்கர்’ பட்டம் பெற்றார் யாழ்.யோகா உலகம் அமைப்பின் இயக்குனர்(Photos)

421

யாழ். யோகா உலகம் அமைப்பின் இயக்குனரும், இளம்சமய சொற்பொழிவாளருமான சிவஞானசுந்தரம் உமாசுதன் “சைவநெறிச் சன்மார்க்கர்” எனும் சிறப்புப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு உலக சைவத்திருச்சபையின் இலங்கை கிளையினர் ஆலய வீதியில் அமைந்துள்ள மனோன்மணி அம்மன் ஆலயத்தில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வுகளைத் தினமும் நடாத்தி வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்படி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வில் ‘கந்தபுராணத்தில் முத்திரை’ எனும் தொனிப்பொருளில் சி. உமாசுதன் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவின் இறுதியில் உமாசுதன் உலக சைவத்திருச் சபையின் இலங்கை கிளையினரால் “சைவநெறிச்சன்மார்க்கர்” எனும் பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

உமாசுதனின் சமய மற்றும் யோகா கலைப் பணிகள் சிறக்க நாமும் மனதார வாழ்த்துவோம்.

{செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி-}