யாழ். நல்லூர் ஈழத்து சீரடி சாய் ஆலய கொடியேற்றம் (Photos)

ஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இதன்போது விசேட பூஜைகள் இடம்பெற்றன. இந்த பூஜைகளில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இதன்போது சீரடி சாயின் உருவப்படத்திற்கு நாணய தாள்களாலான மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

எதிர்வரும் 12ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் அதனைத் தொடர்ந்து 13ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்-