யாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் நாளை வாணி விழா

யாழ்.கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் வாணி விழா நாளை சனிக்கிழமை(05) காலை-09.30 மணி முதல் மேற்படி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் யாழ். மாநகரசபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் தம்பதிகள் பிரதம விருந்தினராகவும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அ.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன் மாணவ- மாணவிகளின கலைநிகழ்வுகளும் நடைபெறும். கலைநிகழ்வுகளைத் தொடர்ந்து மதியபோசனமும் வழங்கப்படும்.

மேற்படி விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

{எஸ்.ரவி}