196 புள்ளிகளை பெற்று சாதித்த யாழ். இந்து மாணவன் 

670

இம்முறை வெளியான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் யோகநாதன் ஆரூசன் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய இம்முறை தேசிய மட்ட மாவட்ட மட்ட தரப்படுத்தல்கள் வெளியிடப்படவில்லை.

தினமும் கற்கும் பாடங்களை அன்றன்றே வீட்டில் வந்து திரும்பவும் மீட்டல் செய்து கற்றுக் கொள்ளுவேன். இதுவே என் வெற்றிக்கு காரணம் என குறித்த மாணவன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.      

இன்று வெளிவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 160 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இன்று வெளியாகிய புலமைப்பரிசில் முடிவுகளை http://www.results.exams.gov.lk இணையத்தில் பார்வையிடலாம்.