வடிகாலுக்குள் விழுந்த மாட்டை மீட்ட இளைஞர்கள்

250

வவுனியா மாவட்டத்தின் பூந்தோட்டம் பகுதியில் வடிகானிற்குள் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்ட பசு மாட்டை அப்பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் மீட்டெடுத்த சம்பவம் இன்று இடம்பெற்றது.

இன்றையதினம் அதிகாலை குறித்த பகுதியில் நின்றிருந்த பசுமாடு அருகில் இருந்த கழிவுநீர் வடிகானில் விழுந்துள்ளது. எழுந்து செல்ல முடியாமல் உயிருக்கு போராடிய மாட்டினை அப்பகுதியில் ஒன்று கூடிய இளைஞர்கள் மீட்டு வெளியில் விட்டிருந்தனர்.

குறித்த இளைஞர்களின் முன்னுதாரமான செயற்பாட்டை பலரும் பாராட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.