யாழ். நாகர்கோவிலில் வாகன சக்கரத்துக்குள் நசியுண்டு இறந்த முதலை (Photos)

268

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் நாகர்கோவிலுக்கு அண்மையாக இன்று அதிகாலை முதலை ஒன்று வாகன சக்கரத்தில் நசியுண்டு இறந்துவிட்டது.

பிரதேச மக்களின் தகவலின் படி தினமும் பாம்பு, ஆமை, முதலை என்று ஏதாவது ஒரு உயிரினம் இரவு வேளைகளில் வீதியை கடக்க முற்பட்டு வாகன சக்கரத்துக்குள் அகப்பட்டு இறந்துவிடுகின்றது.

முதலை தானே, பாம்பு தானே என்று கடந்துபோக முடியவில்லை, நம்மைப்போல இயற்கையின் படைப்புகளே இவையும். உண்மையில் இந்த உயிரினங்களின் இடங்களை நாங்கள் தான் எடுத்துக்கொண்டு விட்டோம்.

இந்த உயிரினங்களை பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் முன்னெடுக்க வேண்டும்.

தகவல்: கு. வசீகரன்-
படங்கள்: சித்திராதரன்-