புலிகளின் சீருடை தொப்பி வைத்திருந்ததாக கூறி வட்டுக்கோட்டை இளைஞன் கைது

299

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி என்பன வைத்திருந்ததாக கூறி யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் நேற்று கடமையில் இருந்த போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் சந்தேகத்துக்கு இடமாக நின்ற இளைஞனை சோதனையிட்ட போதே மேற்படி பொருட்கள் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான துரைசிங்கம் ரஜீவனே கைது செய்யப்பட்டு தற்போது வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.