தேசிய பளுதூக்கும் போட்டியில் வெண்கலப்பதக்கம்!- சாதித்த வயாவிளான் மத்திய கல்லூரி மாணவிகள்

249

இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் யாழ்ப்பாணம் – வயாவிளான் மத்திய கல்லூரியின் மாணவிகள் இரண்டு வெண்கலபதக்கங்களைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற போட்டிகளில் நிதுர்சனா மற்றும் அபிசாக் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இவர்கள் திங்கட்கிழமை பொலனறுவையில் இடம்பெறவுள்ள பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

கனடா பழைய மாணவர்களின் நிதியுதவியில் வழங்கப்பட்ட பளுதூக்கும் உபகரணங்கள் மூலம் இம்மாணவிகள் பயிற்சிகளை பெற்று இப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.