தமிழ் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டான ஹிருஷி வசுந்தரா (Photos)

அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வரையிலான மேற்குலக நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த பத்தாண்டுகளாக கோடி கோடியாக பணத்தை செலவளித்திருந்தன.

ஆனால், 41 படங்களை மட்டும் எடுத்து ஒட்டுமொத்த இலங்கையர்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தசுன் நிலன்ஜன.

இன்று இலங்கையில் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவராக ஹிருஷி வசுந்தரா விளங்குகிறார்.

குறிப்பாக முகநூலை பயன்படுத்தும் தமிழ் இளைஞர்கள் இந்த யுவதியின் புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

கம்பஹா பகுதியில் ஆசிரியையாக கடமையாற்றும் இவர், ஒரு சிங்கள திரையுல நடிகையாகவும், மொடலாகவும், அறிவிப்பாளராகவும் உள்ளார்.

29.06.1995 இல் பிறந்த இவருக்கு இப்போது 24 வயதாகும்.

மாணவர்களை மிகவும் பண்பான முறையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதனை பிரதிபலிக்கும் வகையில் பிரபல புகைப்பட கலைஞரும், பேராசிரியருமான தசுன் நிலன்ஜன (Dasun Nilanjana) இந்த அட்டாகாசமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.

குறிப்பாக இந்த புகைப்படப்பிடிப்பு கம்பஹா நிட்டம்புவ – அத்தனகல ரஜமஹா விஹாரையில் நடத்தப்பட்டுள்ளது.

இன்று நல்லிணக்கத்தின் தூதராக ஹிருஷி வசுந்தரா திகழ்கிறாரோ என்கிற நிலை உள்ளது.

புகைப்படங்களால் மாற்றங்களை ஏற்படுத்திய புகைப்பட கலைஞரான பேராசிரியர் தசுன் நிலன்ஜனவிடம் கேட்ட போது தெரிவித்த விடயங்கள் வருமாறு,

இந்த விடயத்தை தானும் உணர்ந்ததாக கூறிய அவர், நாட்டிற்கு இவ்வாறான நல்லிணக்கத்தை ஏற்படுத்த கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

நாம் அனைவரும் பொதுவாக உணர்வுகளையே சுமந்தே செல்வதாகவும், ஏன் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

நாம் அனைவரும் சமநிலையாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றர்.

எது எவ்வாறாயினும், நாங்கள் அனைவரும் ஒரே தாய்நாட்டையே பகிர்ந்து கொள்கின்றோம் எனவும், நாம் அனைவரும் அதையே மதிக்கின்றோம் எனவும் புகைப்பட கலைஞரான பேராசிரியர் தசுன் தெரிவித்தார்.

ஒரே போட்டோ சூட்டில் இன்று இலங்கையில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் ஹிருஷி.