யாழ். பல்கலையில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறி

யாழ்ப்பாண பல்கலையில் விலங்கு விஞ்ஞானத்துறை (கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு) சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விலங்கு விஞ்ஞானத்துறை விவசாய பீடத்தினால் நடாத்தப்படவுள்ள 3 மாதங்கள் கொண்ட குறுங்கால பயிற்சிநெறியானது வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது.

இதற்கான தகமையாக தரம் 9 வரை கற்றிருத்தல் வேண்டும். கற்கை நெறிக்கான கட்டணமாக 8000 ரூபாய் அறவிடப்பட உள்ளது.

கற்கை நெறிக்கான விண்ணப்ப படிவத்தினை யாழ். பல்கலைக்கழக விவசாயபீட இணையத்தளத்திலோ www.agri.jfn.ac.lk அல்லது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி அலுவலகத்திலோ அலுவலக நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.

கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறிக்கான பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தினை 2019.11.04 ம் தி க திக்கு முன்னராக கிடைக்கக் கூடியவாறு தபாலுறையில் இடதுபக்க மேல் மூலையில் “கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு சான்றிதழ் கற்கை நெறிக்கான விண்ணப்பம்” என குறிப்பிட்டு பீடாதிபதி, பீடாதிபதி அலுவலகம், விவசாயபீடம், யாழப்பாணப் பல்கலைக்கழகம், அறிவியல்நகர், கிளிநொச்சி. என்னும் முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய இறுதி திகதி, 04.11.2019.

ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள்….