சிவாஜிலிங்கத்தின் மறுபக்கம்

சிவாஜிலிங்கத்தின் ஒரு பக்கத்தில் கோமாளித்தனமான பக்கங்களும் உண்டு. ஹிலாரிக்காக நல்லூரில் தேங்காய் அடித்தார். குருநாகலில் போய் தேர்தலில் போட்டியிட்டார். எப்போதும் உணர்ச்சிவசப்படுகின்ற ஆள். என்பார்கள்.

ஆனால், அவருக்கு பிரகாசமான பக்கங்கள் உண்டு. மற்றவர்கள் விளக்கேற்ற பயப்படும் போது இவர் விளக்கேற்றுவார். மாகாண சபையில் இனவழிப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு சிவாஜிலிங்கம் தான் பிரதான காரணமாக இருந்தார்.

தமிழ் அரசியல் தலைமைகள் வலுவாக இல்லாத நேரத்தில் இப்படியான தீவிரமான செயற்பாட்டாளர்கள் தனித்து தான் ஓடுவார்கள். இது தவிர்க்க முடியாது.

பெட்டி கைமாறுகிறது போன்ற சிவாஜிலிங்கத்துக்கு சொல்லப்படுகின்ற சூழ்ச்சிக் கோட்பாடுகளில் நம்பிக்கையில்லை. அவர் மோசமான நோயாளியாக தான் இருக்கிறார். அப்படி காசு இருந்தால் அவர் முதலில் தன் உடம்பை தான் பார்த்திருக்க வேணும். அவர் தனக்காக காசு சேர்க்கிற ஆளாயும் தெரியவில்லை.

அவர் குறிப்பாக 2009 க்கு பின்னர் மற்ற தமிழ் கட்சிகள் செய்யத் துணியாத பல காரியங்களை துணிச்சலுடன் செய்தவர். அவர் ஒரு தனி மனித இயக்கம்.

சிவாஜிலிங்கத்தின் மறுபக்கத்தை விளக்குகின்றனர் நிலாந்தன் மற்றும் யோதிலிங்கம்.